ETV Bharat / briefs

ஜவுளிக்கடையை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்றவர் கைது

மதுரை: ஜவுளிக்கடையை அபகரிக்க நினைத்த உள் வாடகை தாரரிடமிருந்து கடையை மீட்டுத் தரக்கோரி தீக்குளிக்க முயற்சி செய்தவர், குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலை மறியலில் ஈடுபட்ட ஜவுளிக்கடை உரிமையாளர்

author img

By

Published : Jun 7, 2020, 5:53 PM IST

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் தனியார் திரையரங்கு அருகே, ஐந்து வருடங்களாக ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சாகுல் ஹமீது (46). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நடந்த விபத்து காரணமாக கடைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், கடையில் வேலை செய்யும் ஜாபர் என்பவர் ஒரு வருடத்திற்கு மேலாக கடையை உள்வாடகைக்கு எடுத்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த மூன்று மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக கடை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது, மத்திய மாநில அரசுகள் சில தளர்வுகள் அறிவித்ததால் ஜவுளிக்கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சாகுல் ஹமீது உடல்நிலை சரியானதை அடுத்த கடையை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஜாபரிடம் கூறியுள்ளார்.

ஒரு வருடமாக ஜவுளி கடையை நிர்வகித்த ஜாபர், போலியான ஆவணங்களை தயார் செய்து கடை தன்னுடையது என கூறியதாகத் தெரிகிறது. இது குறித்து சாகுல் ஹமீது, ஜாபரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜாபர் கடை தன்னுடையது என கூறியுள்ளார். இதனால், சாகுல் ஹமீது குடும்பத்தினர், உறவினர்கள் விருதுநகர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவரின் உறவினர் ஒருவர் கடையை திரும்ப பெற்றுத் தரக்கோரி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் காவல் துறையினர், சாகுல் ஹமீது அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக, திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.