ETV Bharat / briefs

ஈரோடு எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு எல்லைகளில் தீவிர வாகன சோதனை!
ஈரோடு எல்லைகளில் தீவிர வாகன சோதனை!
author img

By

Published : Jun 18, 2020, 4:08 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 70 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அனைவரும் குணமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 16) சென்னைக்கு சென்று வந்த ஓட்டுநர் ஒருவரின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்களது வீடு அருகில் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் தற்போது பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்திலுள்ள அனைத்து எல்லைகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு - கர்நாடகா எல்லை மற்றும் நாமக்கல் - கரூர் எல்லையில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வாகனங்களில் வருபவர்கள் முறையாக அனுமதி பெற்று வருகின்றனரா என்று விசாரித்து சுகாதாரத்துறை பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

மாவட்டம் முழுவதும் 41 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அனுமதி பெற்று வரும் வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.