சென்னை அணி ரசிகர்களால் பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுவர் சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர். லெக் ஸ்பின்னரான இவரது பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வதென தெரியாமல் பல பேட்ஸ்மேன்கள் திக்குமுக்காடியுள்ளனர்.
இதனால்தான் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் மைதானத்தை சுற்றிவரும் இவருக்கு, ரசிகர்கள் பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப்பெயர் வைத்தனர். கிரிக்கெட்டில் சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை இவர் நிரூபித்திக்காட்டியுள்ளார்.
40 வயதான இவர், 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதனால், இவருக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.
இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை இவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியல்
- இம்ரான் தாஹிர் - 26 விக்கெட்டுகள், 2019
- ஹர்பஜன் சிங் -24 விக்கெட்டுகள், 2013
- சுனில் நரைன் - 24 விக்கெட்டுகள், 2012