ETV Bharat / briefs

உலகக் கோப்பையில் இந்தியாவை ஆதரிக்கும் ஜெர்மனி கால்பந்து வீரர் - தாமஸ் முல்லர்

சவுத்ஹாம்டன்: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக ஜெர்மனி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் ட்வீட் செய்துள்ளார்.

உலகக் கோப்பையில் இந்தியாவை ஆதரிக்கும் ஜெர்மனி கால்பந்து வீரர்
author img

By

Published : Jun 4, 2019, 5:41 PM IST

ஐசிசியால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அந்த வகையில் 12ஆவது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை சவுத்ஹாம்டன் நகரில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்களை கடந்து, கால்பந்து வீரர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. முன்னதாக, இங்கிலாந்து கால்பந்து வீரர் ஹெரி கேன் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது அந்த வகையில் ஜெர்மனி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் என் வாழ்த்துகள். குறிப்பாக, விராட் கோலி தலைமையில் விளையாடும் இந்திய அணிக்குதான் எனது ஆதரவு" என பதிவிட்டுள்ளார். அத்துடன் ஜெர்மனியின் ஆதரவு இந்தியாவுக்கே என ஹேஷ்டேக் செய்தது மட்டுமில்லாமல், இந்திய அணியின் ஜெர்சியை உடுத்திக் கொண்டு கையில் கிரிக்கெட் எம்.ஆர்,எஃப் பேட் வைத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, 2016இல் யூரோ கால்பந்து தொடரில் விராட் கோலி, ஜெர்மனி கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு அந்த அணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

German footballer thomas muller wishes India

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.