வேலூரில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.
இருப்பினும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலப்பாடியைச் சேர்ந்த 70 வயது முதியவர், சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சேன்பாக்கத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர்,
குடியாத்தத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர், விருதம்பட்டையைச் சேர்ந்த 55 வயது முதியவர், ஆகிய நான்கு பேர் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில் உயிரிழந்தனர். ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்ததை அடுத்து வேலூர் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1842ஆக உள்ளது.
இதுவரை 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.