திருச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - Trichy district news
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![திருச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் திருச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:30:15:1594620015-tn-tri-01-farmers-protest-script-photo-7202533-13072020111956-1307f-1594619396-33.jpg?imwidth=3840)
திருச்சி மாவட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
இதில் சாக்கடை கழிவுநீரை விவசாய நிலத்தில் விட கூடாது, விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது.
விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ஓய்வூதியம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
காவிரி - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணாபுரம் பகுதியில் புகுந்த காட்டுயானை.. வனத்திற்குள் விரட்ட முயற்சி!