இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாடு அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, சுயநிதி யோகா கல்லூரிகளில் 2020-21ஆம் ஆண்டில் பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படிப்பிற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து முதல்முறையாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் கையேடு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு ஏற்கெனவே செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 5.30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.