ETV Bharat / briefs

'நோட்டாவுக்கு வாக்களியுங்கள்' - பிரத்யேக பேட்டியில் பிரகாஷ் ராஜ் ஆவேசம்! - independent candidate

அவரவர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் எவரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவிற்கு வாக்களியுங்கள் என்று நடிகரும், மத்திய பெங்களூரு தொகுதியின் சுயேச்சை வேட்பாளருமான பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்
author img

By

Published : Apr 2, 2019, 8:05 PM IST

மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “மக்களின் பிரச்னைகள் மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு புரிவதில்லை. அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு முடிவும் மக்களை காப்பாற்றுவதற்கு இல்லை, அவர்களது கட்சிகளை காப்பாற்றுவதற்கு மட்டுமே பயன் பெறுகிறது.

ஊழல் அதிகம் உலவும் இந்த நாட்டில் நல்ல ஆட்சி இல்லையென்றால் அதற்குத்தேர்தல் தான் மிக முக்கிய காரணம். நம் மீது அதிக தவறு இருப்பதை மறந்து, மற்றவரை குறைகூறிக் கொண்டிருக்கிறோம். வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஆட்சியில் அமரவைப்பது மக்களாகிய நம் கையில் தான் உள்ளது. வேட்பாளர் நம் தொகுதிக்காக மாநிலங்களவையில் குரல் கொடுப்பாரா என்பதை வைத்து தான் வாக்களிக்க வேண்டுமே தவிர ஒரு கட்சிக்காக வாக்களிக்கக்கூடாது.

ஏன் ஏழைகள் ஏழைகளாவே இருக்கிறார்கள், மத்திய பெங்களூரு தொகுதியில் இரண்டாயிரம் குடிசைகள்உள்ளது. அவர்களை இன்றுவரை ஒதுக்கியே வைத்துள்ளார்கள். 60 வருடங்களாகியும் அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை, என்ன காரணங்களால் அவர்களுக்கு பட்டா வழங்காமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

பாஜக அல்லது காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இன வெறி பிடித்தவர்கள். ஒரு கட்சி இந்துக்கள் மட்டுமே என்று கூச்சலிடுகிறது, மற்றொன்று அனைவரும் ஒருவரே என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் நலனே முக்கியமே தவிர இனமோ அல்லது ஜாதி அரசியலோ அல்ல. சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகியுள்ளது, தண்ணீர் இல்லை, படித்தவர்களுக்கு வேலை இல்லை,வேலையை ஒரு சாதரணமான வேலையாக மட்டும் பார்க்காமல் ஒருவருடைய அடையாளமாக பாருங்கள்.

வாக்களிப்பது ஏழை, படித்தவர்கள்,பணக்காரர்கள் விடுமுறையில் சென்று விடுகிறார்கள். ஏழையை, ஏழையாகவே வைத்து பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க இயலும், மக்கள் எந்த ஒரு நிலைமைக்கு தள்ளப் படுகிறார்கள்.அரசு மருத்துவமனையில்ஏழைக்கு சிகிச்சை செய்ய இயலாத நிலைமையும், அவர்களை தனியார் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பும் நிலைமையும் இங்கு தான் நிகழும். இவர்களையெல்லாம் யார் கேள்வி கேட்பது?

பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி

மக்களாகிய நாம் நம்மிடம் தான் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். தேர்தலில் வாக்களித்து நாம் தான் அந்நபரை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவருடைய ஓட்டு என்றைக்கு விற்கப்படாமல் இருக்குமோ அன்றைக்கு தான் இவையனைத்தும் மாறும். இளைஞர்கள் அரசியலுக்குவரவேண்டும் என்று சொல்கின்ற நாம், அவர்களை என்றைக்கு தேர்ந்தெடுக்காமல் இருக்கின்றோமோ அதுவரை இங்கு எந்த ஒரு நிலைமையும் மாறப்போவதில்லை.

நமது ஓட்டு என்றைக்கு விற்காமல் இருக்கின்றதோ, என்றைக்கு ஒரு கட்சி, மற்றொரு கட்சி என்று போட்டியாக பார்க்காமல் இருக்கின்றோமோ, என்றைக்கு நம் வீடு, நம் குழந்தைகள், நம் பணம், நம் தேசம், நம் எதிர்காலம்என்றைக்கு தகுதியான ஒருத்தரை தேர்ந்தெடுக்கின்றோமோ அப்போது தான் முன்னேற முடியும். 5 வருட எதிர்காலம் மக்களாகிய நம் கையில் தான் உள்ளது.சிந்தித்து முடிவு எடுக்கவும்!தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்கயுங்கள். உங்கள் குரல் ஏதோ ஒன்றில் ஒலிக்கட்டும்..!”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.