ETV Bharat / briefs

பட்டாக்கத்தியில் பர்த்டே பார்ட்டி - எட்டு இளைஞர்கள் கைது - Tamilnadu curfew

சென்னை: ஓட்டேரியில் ரவுடி பினு பாணியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எட்டு இளைஞர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Eight teenagers arrested in Chennai
Eight teenagers arrested in Chennai
author img

By

Published : Jul 2, 2020, 6:42 AM IST

ஊரடங்கு உத்தரவை மீறி ஓட்டேரி பொன்னன் தெருவில் இளைஞர்கள் சிலர் முகக்கவசம் அணியாமல் பொதுமக்களுக்கு இடையூறாக ஒன்றரை நீளமுள்ள கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

இதனை அதே பகுதியை சேர்ந்த சென்னை மாநகராட்சியில் மேலாளராக பணிப்புரிந்து வரும் ஜெபஸ்டின்(36) என்பவர் தட்டி கேட்டதற்கு கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து நேற்று முன்தினம்(ஜூன் 30) அவர், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த கௌதம் (23),கௌதம் (20), பாலசந்தர் (21), பிரவீன் குமார் (22), சஞ்சய் (19), அருண் குமார் (20), ஜெயசந்திரன் (19), தர்மா (24) உள்ளிட்ட எட்டு பேரை கைதுசெய்தனர்.

பின்னர் விசாரணையில் நண்பரான கௌதம் என்பவருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 30) பிறந்தநாள் என்பதால் பெரிய அளவிலான கேக் வாங்கி கத்தி மூலம் கேக் வெட்டியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அப்பு என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பின்னர் இவர்கள் எட்டு பேரையும் சிறையில் அடைத்தனர். இவர்கள் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.