திருப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "தமிழ்நாட்டின் திருப்பூர் தவிர மற்ற பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வந்துள்ளவர்களின் எண்ணிக்கை தேதிவாரியாக வெளியிட வேண்டும்.
மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கரோனா பரிசோதனை மையங்கள், மருத்துவமனைகள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் விவரங்களை தேதிவாரியாக வெளியிடவேண்டும்.
மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட முழு உடல் கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும்" உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு