ETV Bharat / briefs

கருணாநிதி பிறந்தநாள்: முகக்கவசம் வழங்கிய எம்.எல்.ஏ - Dharmapuri News

தருமபுரி: கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிராம பகுதி மக்களுக்கு பென்னாகரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்ப சேகரன் முகக்கவசம் வழங்கினார்.

Dmk MLA PNP Inbasekaran
Dmk MLA PNP Inbasekaran
author img

By

Published : Jun 3, 2020, 3:40 PM IST

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல இடங்களில் திமுகவினர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு பென்னாகரம் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, கரோனா தொற்று ஊரடங்கினால் வருவாய் இன்றி தவித்த ஆட்டோ ஓட்டுநர்கள் 180 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, பணிக்குச் செல்வோர், பொது மக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.