ETV Bharat / briefs

பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகரால் கரோனா பரவும் அபாயம்! - Gummidipondi Union Vice President

திருவள்ளூர் : கோவிட்-19 பாதிப்புடன் பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகரால் நூற்றுக்கணக்கானோருக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனாவோடு பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் - 100 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் சூழல்!

author img

By

Published : Jun 23, 2020, 7:03 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கிறது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 2,645 பேர் பாதிக்கப்பட்டும், 42 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதன் பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை மீறி திமுக பொதுக்குழு உறுப்பினரும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவருமான குணசேகர், 100 பேருடன் சேர்ந்து தனது 50ஆவது பிறந்தநாளை குத்தாட்டத்துடன் கொண்டாடினார்.

இந்நிலையில், குணசேகருக்கு கரோனா தொற்று பாதிப்பு நேற்று (ஜூன் 22) உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ சுவாமிநாதன் உள்ளிட்ட 15 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறி, மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள சூழலில் மதுவிருந்து நடத்திய செய்தி வெளியே தெரிந்தால் தாங்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம் என்ற பீதியில், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இந்தச் செய்தி அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.