ETV Bharat / briefs

மகாராஷ்டிராவில் 13 லட்சத்தை தாண்டிய கரோனா‌ பாதிப்பு! - Health Ministry of India

மகாராஷ்டிரா: ஐந்து நாள்களில் கரோனா தொற்று 92 ஆயிரம் பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது.

Maharashtra Corona Updates
Maharashtra Corona Updates
author img

By

Published : Sep 26, 2020, 10:38 PM IST

Updated : Sep 26, 2020, 10:44 PM IST

மகாராஷ்டிராவில் ஐந்து நாள்களில் 92 பேருக்கு கரோனா‌ தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது.

இருப்பினும் நேற்று (செப். 25) புதிய தொற்று பாதிப்பு ஏற்படவில்லை, உயிரிழப்புகள் குறைந்துவிட்டன என்று சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.

தற்போது 17 ஆயிரத்து 794 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இது செப்டம்பர் 11ஆம் தேதி பதிவுசெய்யப்பட்ட 24 ஆயிரத்து 886 என்ற ஒருநாள் எண்ணிக்கையை விடக் குறைவு.

இதுவரை 34 ஆயிரத்து 761 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆறு நாள்களுக்குப் பிறகு, மாநிலத்தின் பூரண குணமடைபவர்களின் விகிதம் 75.86 விழுக்காட்டிலிருந்து 76.33 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா உயிரிழப்பு விகிதம் 2.67 விழுக்காடாக உள்ளது.

19 ஆயிரத்து 592 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 92 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.

இது மாநிலத்தில் தற்போதுள்ள இரண்டு லட்சத்து 72 ஆயிரத்து 775 பாதிப்பபுகளை விட மிக அதிகம்.

வெள்ளிக்கிழமை புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு 3.46 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழக்கின்றார். ஒவ்வொரு மணி நேரமும் 741 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

416 உயிரிழப்புகளில், புனே (56), நாக்பூர் (53), மும்பை (48), நாசிக் (42), கோலாப்பூர் (31), சாங்லி (20), சதாரா (19), தானே மற்றும் ராய்காட் (18 தலா), அகமதுநகர் (16), ஜல்கான் (15), பால்கர் (13), அவுரங்காபாத் மற்றும் கோண்டியா (தலா 8), லாதூர் மற்றும் அமராவதி (தலா 6), சோலாப்பூர் மற்றும் சந்திரபூர் (தலா 5), வர்தா (4), பர்பானி, உஸ்மானாபாத் மற்றும் பண்டாரா (தலா 3), ரத்னகிரி (தலா 2), பீட், அகோலா மற்றும் வாஷிம் (தலா 2) மற்றும் நந்தூர்பார், சிந்துதுர்க், ஜல்னா மற்றும் யவத்மால் (தலா 2).

54 உயிரிழப்புகளைப் பதிவுசெய்த ஒரு நாள் கழித்து, மும்பை மீண்டும் துணை வரம்பில் 48 உயிரிழப்புகளுடன் சரிந்தது.

இது நகரத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 706 ஆகவும், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,876 அதிகரித்து 19 லட்சத்து 4 ஆயிரத்து 303 ஆகவும் உள்ளது.

மொத்தம் 8 வட்டங்களில், மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று (செப்.25) எம்.எம்.ஆரில் உயிரிழப்புகள் 97 ஆக அதிகரித்து, 15 ஆயிரத்து 275 ஆகவும், 4 ஆயிரத்து 462 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் 4 லட்சத்து 57 ஆயிரத்து 919 ஆகவும்‌ உள்ளன.

புனே, சோலாப்பூர், சதாரா ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் நாள்தோறும் 4 ஆயிரத்து 727 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 45 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 83 ஆயிரத்து 912 லிருந்து 19 லட்சத்து 29 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் நிறுவன தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 412 லிருந்து 32 ஆயிரத்து 747 ஆக குறைந்துள்ளது.

இதற்கிடையில், கரோனா தாக்குதலில் முன்மாதிரியான பணிகளை செய்ததற்காக இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்தின் 'ஐ.ஏ.சி.சி கோவிட் க்ரூஸேடர்ஸ் -2020' விருதை பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் ஐ.எஸ். சாஹலுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி வழங்கினார்.

தற்போது மகாராஷ்டிரா கரோனா பாதிப்பால் தனித்து தெரிகிறது. கரோனா தொற்றை பொறுத்தவரை, 'எனது குடும்பம், எனது பொறுப்பு' ஆரோக்கியமான மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற சுகாதார வரைபடத் திட்டத்தை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Last Updated : Sep 26, 2020, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.