இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
7.15 மணி வரை தொடர்ந்து பெய்த இந்த மழையால், திருப்பூர் - அவிநாசி ரோடு காந்திநகர் பகுதியில் வாகனங்கள் மூழ்கும் அளவில் தண்ணீர் ரோட்டில் சென்றதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகினர்.
அதேபோல, புஷ்பா திரையரங்க ரவுண்டான அருகில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியினை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
ஊத்துக்குளி ரோடு, ரயில்வே பாலம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, பல்லடம் ரோடு சின்னக்கரை, வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.