திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர் பகுதிகளான செவண்ரோடு, செண்பகனூர், வத்தலகுண்டு பிரதான சாலையில் ஏராளமான பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன.
இந்த பெட்ரோல் பங்குகள் முறையாக உரிமம் பெற்று இயங்குகிறதா என புதிதாக பதவி ஏற்றுள்ள சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வாகனங்களுக்கு போடப்படும் பெட்ரோல் அளவு சோதிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான பகுதியில் பெட்ரோல் பங்குகள் அமைந்திருக்கிறதா என்பதை பரிசோதித்த சார் ஆட்சியர், விதிமீறல்கள் இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.