ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் சபாநாயகருக்கு முதலமைச்சர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல்செய்யப்பட்டவை.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு மட்டுமே கொறடாவின் உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனி அணியாகச் செயல்பட்டதால் அவர்களுக்கு கொறடா உத்தரவு அனுப்பப்படவில்லை.அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தாலும், அவர்கள் அதிமுகவுக்கு எதிராகச் செயல்படவில்லை.
தற்போது ஒரே அணியாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறார்கள்.
11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.