ETV Bharat / briefs

காரைக்காலில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் கொண்டாட்டம் - பிரான்ஸ் நாட்டின் 230 ஆவது தேசிய தினம்

காரைக்கால்: பிரான்ஸ் நாட்டின் 230ஆவது தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பிரஞ்சு போர்வீரர் நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைக்காலில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் கொண்டாட்டம், போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி.

author img

By

Published : Jul 14, 2020, 10:34 PM IST

பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலை மக்கள் புரட்சி மூலம் தகர்க்கப்பட்டு, கடந்த 1789 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது.

இந்தத் தினத்தை பிரான்ஸ் நாட்டினர் தேசிய தினமாக கொண்டாடுகின்றனர். அந்தவகையில், புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜீலை 14 ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று (ஜூலை14) பிரான்ஸ் நாட்டின் 230ஆவது தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பிரஞ்சு போர்வீரர் நினைவுச் சின்னத்தில் போரின்போது உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலர், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் கலந்துகொண்டு போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: பல்வேறு திட்டங்களை திறந்து வைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.