ETV Bharat / briefs

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bike Robbery In Tirupattur
Bike Robbery In Tirupattur
author img

By

Published : Aug 16, 2020, 9:00 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லம் பாஷா. இவர் இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலை வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் சமையல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். அவரை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சிறிது தூரம் சென்றவுடன் பின்னால் அமர்ந்து இருந்தவர், அஸ்லம் பாஷா கழுத்தை நெரித்து வாகனத்தை ஓரம் நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து, பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அஸ்லம் பாஷாவை சரமாரியாக தாக்கி, ஆடையை கிழித்து அவரிடமிருந்த ரூ.19 ஆயிரத்து 500 ரொக்கம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனிடையே, இருசக்கர வாகனத்தை மட்டும் அருகில் உள்ள ஒரு கடை முன்பாக நிறுத்தியுள்ளனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த அஸ்லம் பாஷா, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இது குறித்து நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.