இது குறித்து அவர் கூறுகையில்,
"கடந்த வாரம் பிரிஸ்பேனில் நடைபெற்ற பயிற்சியின்போது, நாதன் குல்டர் நைல் வீசிய பந்தை, ஸ்டீவ் ஸ்மித் யாரும் எதிர்பாராத வகையில், ஆஃப் சைட்டில் சிறப்பான ஷாட் ஆடினார். அந்த ஷாட்டை பார்க்கும் போது, சச்சின் பேட்டிங் செய்வது போல் இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று பயிற்சி போட்டியிலும் அவர் சிறப்பாகவே பேட்டிங் செய்தார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய வார்னர், ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஒராண்டுக்கு பிறகு மீண்டும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனால், இவர்களின் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.