ETV Bharat / briefs

முதுகு வலியிலிருந்து விடுபட 5 வழிகள் ! - Health Tips for Back Bone Pain

முதுகு வலியோடு போராடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதிலிருந்து விடுபட ஐந்து வழிகளை சொல்கிறோம் இதோ...

முதுகு வலியிலிருந்து விடுபட 5 வழிகள் !
முதுகு வலியிலிருந்து விடுபட 5 வழிகள் !
author img

By

Published : Jun 26, 2020, 12:53 AM IST

சராசரியாக முதுகில் தொடர்ந்து ஏற்படும் வலி நீண்டநேரம் அமர்ந்தே இருப்பதன் விளைவாக ஏற்படுகிறது. இயந்திர கதியான நவீன வாழ்க்கையில் ஒரு நாளின் பெரும்பகுதியை மடிக்கணினி திரையின் முன் உட்கார்ந்தோ அல்லது கைப்பேசிகளின் வழியே இணைய உலகத்தில் தேடுதல் வேட்டையிலோ நாம் செலவிடுகிறோம். இத்தகைய பணிச்சூழல் நம் கைகளிலும் முழங்கைகளிலும் அதிகமான வேலை அழுத்தத்தை அளிக்கிறது. இவை முதுகு வலி ஏற்பட வழிவகுக்கிறது.

நீங்கள் கடினமான பணிகளை மேற்கொண்டாலும் சரி அல்லது எளிய வேலையைச் செய்தாலும் சரி முதுகு வலி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் முதுகுவலி தோன்றலாம்.

தொடர்ந்து அதனால் பாதிக்கப்படுபவர்கள் அதற்குண்டான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால், சிறிதாக இருக்கும் முதுகு வலி நாள்பட கடும் முதுகு வலி அல்லது தண்டுவட பிரச்னைகளில் கொண்டு சேர்க்கும்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், உங்கள் வலியைத் திரும்பப் பெற இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

முதுகு வலியோடு போராடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதிலிருந்து விடுபட ஐந்து வழிகளை சொல்கிறோம் இதோ...

சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுங்கள்

நீங்கள் 4-6 வாரங்களுக்கு மேல் முதுகுவலியை சந்தித்தால் உடனடியாக நல்ல உடல் பயிற்சி நிபுணரை சந்தியுங்கள். உங்கள் உடல் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, அதன் இயல்பான இயக்கத்தை உறுதி செய்ய தேவையான நுட்பங்களை உங்களுக்கு அவர் எடுத்துரைப்பார்.

யோகா பயிற்சி

உள மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, யோகா பயிற்சி குறுகிய காலத்தில் முதுகுவலியை நீக்குகிறது என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. யோகா உங்கள் முழு உடலையும் அத்துடன் சேர்த்து உங்கள் மனதையும் வலுப்படுத்துகின்ற மென்மையான, கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களை உள்ளடக்கிய ஓர் உடல்நல வாழ்வியலை போதிக்கிறது.

இது முதுகுவலி மற்றும் முதுகில் ஏற்படும் பிரச்னைகளை வெகுவாகக் குறைக்கிறது. முதுகுவலியை குறைப்பதற்கான பயனுள்ள உடற்பயிற்சியில் ஒன்று மர்ஜரியாசனா (பூனை போன்ற தோற்றம்). அதனை நீங்கள் முதல்கட்டமாக செய்ய முயலுங்கள்

நல்ல தூக்கம்

இங்கே பலரும் நீண்ட நேரம் தூங்குவதே நல்ல தூக்கம் என நினைப்பதுண்டு. ஆனால், நல்ல தூக்கம் என்பது அதுவல்ல.

நிம்மதியான சூழ்நிலையில் தூங்கவில்லை என்றால் நீங்கள் எழுந்த தருணத்திலிருந்தே முதுகுவலி தொடங்கலாம்.

தூங்கும் போது உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணை அல்லது இரண்டை வைப்பது முதுகுவலியைக் குறைக்க உதவும். மிகவும் மென்மையான மெத்தைகளில் தூங்குவதால் கூட முதுகுவலி ஏற்படலாம். இதனால் முதுகுவலி ஏற்படாமல் இருக்க உறுதியான மெத்தையில் தூங்குங்கள்.

வெப்பம் மற்றும் குளிர்

வெப்பம், குளிர் ஆகிய இரண்டு வகையின் வழியே வழங்கப்படும் சிகிச்சைகள் மூலமாக வலி போக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சிலர் அதை குறைத்து சொல்வதை நாம் அப்படியே ஏற்க தேவையில்லை. பலருக்கு அது வலி போக்கியுள்ளதாக அறிய முடிகிறது.

இது உதவுமா இல்லையா என்பதை அறிய வேண்டுமெனில் நீங்களே முயற்சித்து பார்க்கலாம். காலையில் இரண்டு முதல் மூன்று முறை குளிர்ந்த நீரை கொண்டு ஒத்தடம் கொடுங்கள். இரவு படுக்கைக்கு செல்லும் முன் சூடான நீரைக் கொண்டு ஒத்தடம் கொடுங்கள். மறக்காமல், உங்கள் சருமத்தைப் பாதுகாக்க துண்டை வைத்து ஒத்தி எடுத்து முதுகில் ஒத்தடம் கொடுங்கள். உங்கள் முதுகுவலி குறைகிறதா என்று சரிபாருங்கள்.

மனதை நிதானப்படுத்துங்கள்

ஒருவரின் மனநிலை கூட முதுகுவலி ஏற்பட வாய்ப்புகளை உருவாக்குகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. நாள்பட்ட மன உளைச்சல் அல்லது வாழ்க்கையின் மீதான எரிச்சல் என மன ரீதியிலான சிக்கல்களில் உள்ளவர்களுக்கு சராசரியானவர்களை விட முதுகுவலி மூன்று மடங்கு அதிகமாக ஏற்படும் என மருத்துவ ஆய்வுகளும் சொல்கின்றன. அதாவது நீங்கள் கவலைப்படுகிறீர்கள் அல்லது ஒவ்வொரு சூழ்நிலையிலும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகுகிறீர்கள் என்றால் முதுகுவலி உங்களை நிச்சயம் வாட்டலாம். எனவே, கவலைகளை விட்டொழியுங்கள்.

இவற்றை கடைபிடித்து தான் பாருங்களேன் ...

முதுகுவலி உங்களைவிட்டு பறந்தோடுவது உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.