துபாய், நெதர்லாந்து, அர்மெனியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 450 பேர் மீட்கப்பட்டு நான்கு சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
துபாயிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு தனி விமானம் நேற்றிரவு 183 இந்தியர்களுடன் சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது.
அவர்களில் ஆண்கள் 122, பெண்கள் 43, சிறுவா்கள் 18 பேர் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் முடிந்ததும்,14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 112 இலவச தங்குமிடங்களான சவீதா கல்வி நிலையத்திற்கும், 71 போ் கட்டணம் செலுத்தும் தங்குமிடமான ஹோட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து நெதர்லாந்திலிருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் மூலம் 52 இந்தியா்கள் மும்பை வழியாக சென்னை திரும்பினர். அவர்களில் ஆண்கள் 33, பெண்கள் 18 பேர் என ஒரு சிறுவனும் அடங்கும்.
இதேபோல் அர்மெனியா நாட்டிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு 96 இந்தியர்கள் சென்னை வந்தடைந்தனர். அவா்களில் 81 பேர் ஆண்கள், மீதமுள்ள 15 பேர் பெண்கள் ஆவார்கள்.
மேலும், வளைகுடா நாடான குவைத்திலிருந்து தனியாா் சிறப்பு விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு 119 இந்தியா்களுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 116 பேரும், பெண்கள் மூன்று பேரும் இருந்தனர்.
இவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா ஹீரோக்களுக்கு பாராட்டு ஓவியம்: 400 பேர் வரைந்து சாதனை