சென்னையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. தினமும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து வருகிறது. நேற்று மட்டும் 1,146 இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மண்டலங்களில் இரண்டாயிரத்தைக் கடந்துள்ள பாதிப்பு எண்ணிக்கை, மூன்று மண்டலங்களில் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. சென்னையில் மே 27ஆம் தேதிவரை 11 ஆயிரத்து 131 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 நாள்களில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 20 ஆயிரத்து 993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியல் பின்வருமாறு:
ராயபுரம் - 3,717 பேர்
திரு.வி.க. நகர் - 2,073 பேர்
வளசரவாக்கம் - 1,043 பேர்
தண்டையார்பேட்டை - 2,646 பேர்
தேனாம்பேட்டை - 2,374 பேர்
அம்பத்தூர் - 733 பேர்
கோடம்பாக்கம் - 2,323 பேர்
திருவொற்றியூர் - 784 பேர்
அடையாறு - 1,158 பேர்
அண்ணா நகர் - 1,864 பேர்
மாதவரம் - 579 பேர்
மணலி - 312 பேர்
சோழிங்கநல்லூர் - 366 பேர்
பெருங்குடி - 389 பேர்
ஆலந்தூர் - 364 பேர்.
நேற்று அதிகபட்சமாக தண்டயார்பேட்டையில் 174 பேரும், ராயபுரத்தில் 165 பேரும், கோடம்பாக்கத்தில் 121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டலங்களின் மொத்த எண்ணிக்கையில் 59.87 விழுக்காடு ஆண்களும், 40.12 விழுக்காடு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.