கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகிரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ள மாவட்டமாக குமரி மாவட்டம் மாறி வருகிறது. வருவாய் துறை , காவல் துறை, மருத்துவ துறை, சிறைத் துறை என அணைத்து துறையில் உள்ளவர்களும் பாதிக்கபட்டுவருவதால் ஓட்டுமொத்த பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் வேகம் கடந்த 10 நாள்களாக ஒரு நாளைக்கு 100, 150 என அதிகரத்துவந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3ஆயிரத்தை நெருங்குகிறது.
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு காவல் ஆதவி ஆயாவாளர், தீயணைப்பு வீரர், நாகர்கோவில் சிறைத் துறையில் உள்ள ஒரு காவல் ஆய்வாளர், 18 கைதிகள் என மொத்தம் 19 பேருக்கு தொற்று பரவி உள்ளது.
இதனால் சிறைச்சாலைக்கு மாநகராட்சி அலுவலர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.நெல்லை மாவட்ட கைதி ஒருவர் சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தீடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு தொற்று உறுதிசெய்யபட்டதை அடுத்து அவர் இருந்த அறையில் உள்ளவர்களை பரிசோதனை செய்ததில் 18 கைதிகளுக்கும் தொற்று பரவியிருந்தது. மேலும் கைதிகளுக்கும் பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்று முடிவு வந்தபின் தெரியும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அவர்கள் தற்போது தனிமைபடுத்தபட்டுள்ளனர். கரோனா தொற்று உள்ளவர்கள் நீதிமன்ற உத்தரவுபடி மருத்துவமனைக்கு மாற்றபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
இதுவரையிலும் 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்யபட்டுள்ளனர். 2ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 125 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் , 1400 பேர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனா தொற்றால் 22 பேர் இறந்துள்ளனர்.
கோவிட் கேர் சென்டரில் உள்ள 1400 கரோனா நோயாளிகளின் உணவு பிரச்னையை போக்க இன்றிலிருந்து தனியார் உணவகங்கள் மூலமாக ஐந்து வேளையும் உணவு வழங்க தமிழ்நாடு அரசின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.