இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக 80 ஆயிரத்து 868 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 388, மேற்கு வங்காளம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த தலா இரண்டு நபர்கள், ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய தலா ஒருவர் என 5 ஆயிரத்து 395 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இதுவரை மாநிலம் முழுவதும் 75 லட்சத்து 52 ஆயிரத்து 282 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தி மையங்களில் 45 ஆயிரத்து 881 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்து 5 ஆயிரத்து 572 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 664ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 846ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்:
சென்னை - 1,74,143
செங்கல்பட்டு - 37,494
திருவள்ளூர் - 33,501
கோயம்புத்தூர் - 34,558
காஞ்சிபுரம் - 22,691
கடலூர் - 20,869
சேலம் - 21,386
மதுரை - 16,970
திருவண்ணாமலை - 15,981
தேனி - 15,236
வேலூர் - 15,480
விருதுநகர் - 14,618
தூத்துக்குடி - 13,753
ராணிப்பேட்டை - 13,705
திருநெல்வேலி - 13,101
கன்னியாகுமரி - 13,227
விழுப்புரம் - 12,129
தஞ்சாவூர் - 12,394
திருச்சிராப்பள்ளி - 10,919
கள்ளக்குறிச்சி - 9,420
புதுக்கோட்டை - 9,485
திண்டுக்கல் - 9,062
திருப்பூர் - 8,989
தென்காசி - 7,523
திருவாரூர் - 7,842
ஈரோடு - 7,488
ராமநாதபுரம் - 5,629
நாமக்கல் - 6,231
சிவகங்கை - 5,336
நாகப்பட்டினம் - 5,500
திருப்பத்தூர் - 5,379
கிருஷ்ணகிரி - 4,993
நீலகிரி - 4,746
அரியலூர் - 3,926
தருமபுரி - 4,156
கரூர் - 3,294
பெரம்பலூர் - 1,917
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 968
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: 'வெவ்ஸ் டூ வாட்டர்' பரிசை வென்ற மெட்ராஸ் ஆராய்ச்சியாளரின் சர்வதேச குழு!