இதுகுறித்து அவர் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், "தமிழ்நாடு அரசு வேதா இல்லத்தை கையகப்படுத்த திட்டமிட்ட நாளிலிருந்து நான் எதிர்த்து வருகிறேன். வேதா நிலையம் எங்களுடைய பூர்வீக சொத்து. அதனை அரசுடைமையாக அறிவித்துள்ளதை எதிர்த்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். அரசு இழப்பீடு தொகையை அறிவித்ததே தவறு. கணக்கு வழக்குகளை நாங்கள் ஓராண்டில் செலுத்துகிறோம் என நீதிமன்றத்தில் பொறுப்பேற்றுள்ளோம்.
இந்த நிலையில் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டிருப்பது அத்துமீறிய செயல். தனியார் சொத்துக்களுக்கு தொகை நிர்ணயிப்பது தவறு. அரசு நிகழ்ச்சிகளில் தான் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டுள்ளோம். அது வெளிப்படையாக தெரியாது. நிலத்தை மட்டும்தான் அரசு கையகப்படுத்த வேண்டும், அங்குள்ள பொருள்களை அல்ல.
பொருள்களை பட்டியலிட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு அப்படி செய்யவில்லை. எங்களுக்கும் பட்டியல் எடுக்க அனுமதி வழங்கவில்லை. எனவே, வேதா இல்லத்தை அரசுடைமையாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இதையெல்லாம், அதிமுக மக்களுக்காக செய்யவில்லை. வாக்கு வங்கிக்காக செய்கிறார்கள். ஜெயலலிதா சினிமாவில் கஷ்டப்பட்டு சம்பாதித்தார். அவரது பாரம்பரிய சொத்தை காப்பது எங்களது கடைமை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேதா நிலையம் அரசுடைமையானது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு