ETV Bharat / bharat

‘ஒரு நாள் டெலிவரி பாய்’ - நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சொமேட்டோ சிஇஓ எடுத்த அவதாரம்! - ஆன்லைன் உணவு டெலிவரி

நண்பர்கள் தினத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கொண்டாடி வரும் நிலையில், உணவு டெலிவரியில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல், தங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டி, டெலிவரி பாய் அவதாரம் எடுத்து உள்ளார்.

மூழ்காத ship நாளில் டெலிவரி பாய் ஆகி வாடிக்கையாளர்களை அசத்திய ஜொமாட்டோ சீஇஓ.,
மூழ்காத ship நாளில் டெலிவரி பாய் ஆகி வாடிக்கையாளர்களை அசத்திய சொமேட்டோ சீஇஓ.,
author img

By

Published : Aug 6, 2023, 8:22 PM IST

ஹைதராபாத்: உணவு வகைகளை ஆன்லைனில் டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் சொமேட்டோ நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல், நண்பர்கள் தின கொண்டாட்டத்தை வித்தியாசமாகவும், அதுவும் புதுமையான முறையில் கொண்டாடி உள்ளார்.

அந்த வித்தியாசம் யாதெனில், தனது நிறுவனத்தின் டி சர்ட்டை அணிந்து கொண்டு, ராயல் என்பீல்ட் பைக்கில், தனது வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து உள்ளார். இந்த போட்டோக்களை, அவர், தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார். இந்த போட்டோக்கள், தற்போது நெட்டிசன்களால், சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சொமேட்டோ நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல், தனது நிறுவன டி சர்ட்டில், வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை டெலிவரி செய்தது மட்டுமல்லாது, டெலிவரி பார்ட்னர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி, அதுகுறித்த வாசகங்கள் இடம்பெற்று இருக்கும் ரப்பர் பிரேஸ்லெட் வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.

தங்களது வாடிக்கையாளர்களுக்கும், ஹோட்டல்களுக்கும், உணவு வகைகள் உடன், நண்பர்கள் தின கைப்பட்டையையும் வழங்கினோம். இந்த ஞாயிற்றுக் கிழமை, எனக்கு சிறப்பு நாள் ஆக அமைந்து உள்ளதாக, ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தீபேந்தர் கோயலின் ட்வீட்க்கு நெட்டிசன்கள் பெரும் வரவேற்பு அளித்து உள்ள நிலையில், ஒரு நெட்டிசன், “ இது எனது சிறந்த நண்பர்கள் தின கொண்டாட்டம்” என அதில் கருத்து தெரிவித்து உள்ளார்.

சொமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல் இதற்குமுன், புத்தாண்டு தினத்திலும் இதுபோன்று டெலிவரி பாய் ஆக மாறி, தனது வாடிக்கையாளர்களை வியப்பிற்கு உள்ளாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Amrit Bharat : 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடக்கம் - தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் எவை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.