மைசூரு(கர்நாடகா):மைசூருவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று (ஜூன் 21) கலந்து கொண்டார். அப்பேது பொதுமக்களுடன் இணைந்து மோடியும் யோகா செய்தார்.இதில் பேசிய மோடி, "இந்த 8வது சர்வதேச யோகா தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று உலகின் அனைத்து பகுதிகளிலும் யோகா செய்யப்படுகிறது. யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. .யோகா சமுதாயத்திற்கு அமைதியை கொண்டு வரும்.
யோகாவிலிருந்து வரும் அமைதி தனிநபர்களுக்கு மட்டுமல்ல, நமது நாட்டிற்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டு வருகிறது." யோகா என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொருந்தும் என்றார். அதனால்தான் இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'யோகா மனிதகுலத்திற்கானது’ என்பதாகும் என பிரதமர் மோடி கூறினார்.
இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளான "மனிதகுலத்திற்கான யோகா" என்ற தீம் பல ஆலோசனைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது கரோனாவின் உச்சக்கட்டத்தின் போது ஏற்பட்ட மன அழுத்தத்தை தணிப்பதில் யோகா எவ்வாறு உதவியது என்பது குறித்தும், மற்றும் கரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்தில் எவ்வாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது என்பதை சரியான முறையில் செயல்படுத்தியது. இரக்கம், ஒற்றுமை உணர்வை வளர்ப்பது மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களிடையே உருவாக்குவதன் மூலம் மக்களை ஒன்றிணைக்க யோகா உதவும்.
ஆயுஷ் அமைச்சகத்தின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 2022 யோகா தின கொண்டாட்டங்களில் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோகபீடத்தில் யோகா குரு ராம்தேவ் யோகாசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். .
செப்டம்பர் 27, 2014 அன்று ஐநா பொதுச் சபையில் தனது உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் சர்வதேச யோகா தின யோசனை குறித்து பேசினார். இது குறித்து இந்தியா நிறைவேற்றிய வரைவு தீர்மானத்தை 177 நாடுகள் ஆதரித்தன. யோகாவின் உலகளாவிய அங்கீகாரத்தை அடிப்படையாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக டிசம்பர் 11, 2014 அன்று அறிவித்தது. முதல் சர்வதேச யோகா தினம் ஜூன் 21, 2015 அன்று கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க:சர்வதேச யோகா தினம் -2022; நலமுடன் வாழ வழி