மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மேம்பட்ட பொருள்கள் செயல்முறை ஆராய்ச்சி நிறுவன (ஏஎம்பிஆர்ஐ) கட்டடத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி செய்துவருகிறோம் என தெரிவித்தார்
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்பது அவசியமான ஒன்று. அதை நோக்கியே, ஏஎம்பிஆர்ஐ பணியாற்றி அர்செனிக், புளுரைட் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. வீணாகும் பொருள்களை பயனுள்ளதாக மாற்றுவது குறித்த வியூகத்தை இந்நிறுவனம் மிகச் சிறப்பாக வகுத்துள்ளது. தொழிற்சாலை கழிவை மூலப் பொருளாக கொண்டு கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.