ETV Bharat / bharat

அமிர்தசரஸில் கோயிலின் மூன்றாவது தளத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி - 44 வயது பெண் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் உள்ள போஹர் வேல் ஷிவாலே கோயிலின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 19, 2022, 7:28 PM IST

அமிர்தசரஸ்(பஞ்சாப்): அமிர்தசரஸில் உள்ள போஹர் வேல் ஷிவாலே கோயிலில் 44 வயது பெண் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யமுயன்றார்.

அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விஜய் நகர் காவல் பொறுப்பாளர் ஜக்பீர் சிங் கூறுகையில், '44 வயது பெண் ஒருவர் கோயில் கட்டடத்தில் இருந்து குதித்ததாக தகவல் கிடைத்தது. கவுகுல் விஹாரில் வசிக்கும் இவர், தனது மகளுடன் கோயிலுக்கு வந்துள்ளார். பின்னர், கோயிலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார். குதித்த பெண் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ எனக் கூறினார்.

மேலும் அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். நடுத்தர வயது பெண் திடீரென தற்கொலை முயற்சி செய்ததற்குக் காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்து கொத்தனார் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.