ETV Bharat / bharat

வெறும் கால்களுடன் 5 கி.மீ. ஓடி முதல்பரிசாக 1 லட்சம் வென்ற பெண் விவசாயி! - Telangana State Formation Day

தெலங்கானா மாநிலம், உருவான தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக நடத்தப்பட்ட 5 கி.மீ ஓட்டப்பந்தயத்தில், மல்லம் ரமா என்ற பெண் விவசாயி வெற்றி பெற்றுள்ளார்.

வெறும் கால்களுடன் 5 கிமீ ஓடி முதல் பரிசாக 1 லட்சம் வென்ற பெண் விவசாயி

author img

By

Published : Jun 2, 2022, 10:26 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா சித்திப்பேட்டை மாவட்டம், ஹுஸ்னாபாத்தில், தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 500 பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில், மல்லம்பள்ளியைச் சேர்ந்த மல்லம் ரமா என்ற பெண் விவசாயி கலந்துகொண்டு முதலாவதாக வந்து வெற்றி பெற்றார். முதல் பரிசு பெற்ற பெண் விவசாயி மல்லம் ரமாவை அப்பகுதி எம்எல்ஏ சதீஷ்குமார், சிபி சுவேதா ஆகியோர் பாராட்டினர். மேலும் அவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை அளிக்கப்பட்டது.

ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்பதற்கு முன் பெண் விவசாயி ரமா பயிற்சி செய்யவில்லை. தினமும் எருமை மாடுகளை கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரின் பண்ணை கிணற்றுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். இது ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற உதவியது அப்பெண்ணுக்கு உதவியுள்ளது.

இதுகுறித்து பேசிய ரமா, ’எங்கள் ஊர் பெண்கள் சங்கத்துடன் போட்டிக்கு வந்துள்ளேன். வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த பரிசுத் தொகையை எனது குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்துவேன். அமைப்பாளர்கள் மற்றும் எம்எல்ஏ சதீஷ்குமார், சிபி ஸ்வேதா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என மகிழ்ச்சி ததும்ப பேசி முடித்தார்.

வெறும் கால்களுடன் 5 கிமீ ஓடி முதல் பரிசாக 1 லட்சம் வென்ற பெண் விவசாயி

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: பாஜகவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.