ETV Bharat / bharat

'காதி' பெயரைப் பயன்படுத்த டெல்லி நிறுவனத்துக்குத் தடை! - உலக சொத்துரிமை

'காதி' பெயரைப் பயன்படுத்த டெல்லியைச் சேர்ந்த நிறுவனத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Khadi
Khadi
author img

By

Published : Jul 1, 2021, 10:32 PM IST

டெல்லி: ‘காதி’ பெயரை சட்டவிரோதமாகப் பயன்படுத்த டெல்லி நிறுவனத்துக்கு உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு தடை விதித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ‘ஓம் சாஃப்ட் சொல்யூசன்ஸ்’ என்ற நிறுவனத்தை ஹர்ஸ் காபா என்பவர் நடத்தி வந்தார். இவர், www.urbankhadi.com என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி ஜவுளி விற்பனையில் ஈடுபட்டார்.

இது குறித்து உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் (World Intellectual Property Organization), காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (Khadi and Village Industries Commission) சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் நடுவர் மற்றும் சமரச மையம், காதி பெயரைப் பயன்படுத்தத் டெல்லி நிறுவனத்துக்குத் தடை விதித்தது.

இதுதொடர்பான உத்தரவில்,' காதி என்ற பெயரை டெல்லி நிறுவனம் சட்ட விரோதமாகப் பயன்படுத்துகிறது. காதியின் நல்லெண்ண பயன்களை பெறுவதற்காக, ஒம் சாஃப்ட் சொல்யூசன்ஸ் நிறுவனம் தனது இணையதள பெயரில் காதியைச் சேர்த்துள்ளது. இது, காதியுடன் தொடர்புடைய அமைப்பு என, மக்களை தவறாக வழிநடத்தும்' என குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து காதி மற்றும் கிராம தொழில் ஆணைய தலைவர் வினய் குமார் சக்சேனா கூறுகையில், ‘ பிராண்ட் பெயரை பயன்படுத்தும் விதிமுறை மீறலுக்கு எதிரான காதியின் போராட்டத்தை, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உத்தரவு வலுப்படுத்தும். தனது அடையாளம் மற்றும் உலகளாவிய பிரபலத்தைப் பாதுகாக்க காதி, கிராம தொழில் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்.

தவறான பயன்பாட்டை தடுக்க, காதி என்ற பெயரை பல நாடுகளில் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் பதிவு செய்துள்ளது. இது நமது கலைஞர்களின் வாழ்வாதரமாக உள்ளது' என்றார்.

இதையும் படிக்கலாமே: மெட்ரோவில் நடந்த காதி பேஷன் ஷோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.