மேஷம்: இந்த வாரம் உங்கள் துணையிடம் திருமணத்திற்கு முன்மொழிவீர்கள். உங்களின் வேலைத்திறன் அதிகரிக்கும். உங்கள் வேலையில் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள். சிறந்த வேலையைச் செய்ய விரும்புவீர்கள். இது உங்கள் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் சக ஊழியர்களுடனான உறவுகளையும் மேம்படுத்தும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனளிக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் குறையும். இருப்பினும், மாமியார் தரப்பிலிருந்து பிரச்னைகள் அதிகரிக்கலாம். உங்கள் புத்திசாலித்தனத்தைக் காண்பிப்பதன் மூலம் விஷயத்தைக் கையாள்வதில் நீங்கள் வெற்றியடைவீர்கள். நீங்கள் எதிரிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். மாணவர்களின் படிப்பில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வார முதல் மூன்று நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.
ரிஷபம்: வாரத் தொடக்கத்தில், நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம். இது உங்களை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, உங்களுக்குள் புதிய ஆற்றலையும் உருவாக்கும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். அவர்களுக்கு சிறிது நேரம் கொடுத்து உறவை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். காதலிப்பவர்களுக்கு நேரம் நல்லதாக உள்ளது. உங்கள் உறவை இன்னும் சிறப்பாக்க முயற்சிப்பீர்கள். உங்கள் துணையும், உங்களுக்கு முழு அன்பைக் கொடுப்பார்கள். வியாபார ரீதியாக இந்த நேரம் சிறப்பாக உள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. மாணவர்கள், அவர்களின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நண்பர்கள் படிப்பிலிருந்து உங்களை திசை திருப்பக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாரத் தொடக்கத்தில் பயணத்திற்கு ஏற்றது.
மிதுனம்: இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும், இயல்பும் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். காதலிப்பவர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் இருவரின் அன்பு அதிகரிக்கும். இந்த வாரத் தொடக்கம் உங்களுக்கு சற்று கவலையாகவும், சவாலாகவும் இருக்கலாம். நீங்கள் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம். இது உங்கள் வியாபாரத்தை சிறந்த நிலையில் வைத்திருக்கும். முதலீட்டிலும் அனுகூலம் உண்டாகும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் எதிரிகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் எதை செய்தாலும், செய்யாவிட்டாலும் நிச்சயமாக உங்கள் மனம் பதட்டத்தை அதிகரிக்கலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வார நடுப்பகுதி பயணங்களுக்கு ஏற்றது.
கடகம்: இந்த வாரம் திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை மேலும் சிறப்பாக்க, திங்களன்று சிவபெருமானுக்கு தேங்காய் சாற்றி வழிபட வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக உள்ளது. வாரத் தொடக்கத்தில் வியாபாரத்திற்காக நிறைய போராட வேண்டியிருக்கும். நீங்கள் சில வெளிநாட்டு பயணத்திற்கு செல்லலாம், அவை உங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதில் முக்கியமானவை என்பதை நிரூபிக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு நேரம் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தங்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். இதன் காரணமாக அவர்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொண்டை, வயிறு அல்லது இடுப்பில் பிரச்னைகள் வரலாம். இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.
சிம்மம்: இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் உறவில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அவர்களுடன் வெளியே செல்வதிலும் வெற்றியடைவீர்கள். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் எங்காவது செல்வீர்கள். வாரத் தொடக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வரப்போகும் ஆண்டில் முதலீடு செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் பலம் கிடைப்பதுடன், அனுகூலமும் உண்டாகும். மாணவர்களுக்கு அவர்களின் வழிகாட்டிகளின் மூலம் வழிகாட்டுதல் தேவைப்படும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாரக் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.
கன்னி: இந்த வாரம் திருமணவர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, உங்கள் முன்னேறத்தில் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அதை நீங்கள் மிகவும் பாராட்டுவீர்கள். உங்கள் சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். அவர்களே உங்களுக்கு ஆதரவாக நிற்பதைக் காணலாம். நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். இந்த சூழ்நிலை உங்களுக்கு வியாபாரத்தில் நிறைய நன்மைகளைத் தரும். மாணவர்கள் கடின உழைப்புடன், நேரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் தேவையில்லாமல் டென்ஷன் ஆகாத ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். வார முதல் நாள் பயணங்களுக்கு ஏற்றது.
துலாம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாராக உள்ளது. குடும்பத்தில் சிலரின் நடத்தையால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படலாம். இது வீட்டில் சண்டைக்கு வழிவகுக்கலாம். எனவே, முற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. திருமணமானவர்கள், தங்கள் குடும்ப வாழ்க்கையில் அனைத்து நுணுக்கங்களையும் புரிந்து கொண்டு, தங்கள் வாழ்க்கைத் துணைக்கு மகிழ்ச்சியைத் தருவீர்கள். பதிலுக்கு மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது. அதன் மூலம் உங்களுக்கும் நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாரத் தொடக்கம் பயணங்களுக்கு ஏற்றது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் பயனடைவீர்கள். உடல்நலக் கண்ணோட்டத்தில், உங்களுக்கு தொண்டை பிரச்னை ஏற்படலாம்.
விருச்சிகம்: இந்த வாரம் உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நடத்தையில் மாற்றம் இருக்கலாம். காதலிப்பவர்களுக்கு இந்நேரம் நன்றாக உள்ளது. உங்களுடைய நடத்தை, உங்கள் பணியிடத்தையும் பாதிக்கலாம். கவனமாக செயல்படுங்கள். வேலை செய்யுமிடத்தில் உங்கள் நிலையை மேம்படுத்தும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு அரசாங்கத்தால் பெரிய நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்கத் திட்டத்துடன் இணைந்திருப்பதன் மூலம் நீங்கள் பயனடையலாம். மாணவர்கள் டென்ஷனில் இருந்து மீண்டு வருவார்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். வாரத் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரை பயணங்களுக்கு ஏற்றது.
தனுசு: நீங்கள் உங்கள் உடல்நலத்திலும், செலவுகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு புறம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். மறுபுறம் நோய்வாய்ப்பட வாய்ப்பு உண்டு. சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். வேலையில் இருப்பவர்கள் கவனம் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த காலமாக இருக்கும். சில எதிரிகளும் வலுவாக இருப்பார்கள். இதன் காரணமாக நீங்கள் சில தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும், அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் கடின உழைப்பால் செயல்திறனும் சிறப்பாக இருக்கும். வாரத் தொடக்கம் மற்றும் நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.
மகரம்: உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் அன்பாக இருப்பார்கள். இது உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் தற்போதைய உறவு முறிய வாய்ப்பு உண்டு. இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரம் செய்பவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவார்கள், எனவே வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் வீட்டில் நேர்மறையான சூழலைப் பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் படிப்பில் நன்றாக கவனம் செலுத்த முடியும். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் பயணங்களுக்கு ஏற்றது.
கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு சாதரண வாரமாக உள்ளது. குடும்பச் சூழல் மந்தமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. உங்கள் வேலையில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். பதவி, கௌரவம் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். வியாபார கண்ணோட்டத்திலும் நேரம் நன்றாக உள்ளது. அரசுத் துறையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள். மாணவர்களின் கடின உழைப்பால் படிப்பு செயல்திறனில் தெரியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். வார நடுப்பகுதி மற்றும் இறுதி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.
மீனம்: இந்த வாரம் திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சுமாராக உள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் உறவு நன்றாக இருக்கும். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பாக சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இதன் மூலம் நீங்கள் உங்கள் வேலையை இன்னும் சிறப்பாக மேம்படுத்த முடியும், பொருளாதார நிலை மேம்படும். வியாபாரிகளுக்கு சற்று கவனத்தை ஈர்க்கும். ஏனெனில், பணத்தை தவறான இடத்தில் முதலீடு செய்வது பண இழப்புக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில் முதலீடு செய்வதில் ரிஸ்க் இருக்கலாம். மாணவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ப அவர்கள் படிப்பில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வார இறுதி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.