ETV Bharat / bharat

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஆயுத கடத்தல் - பெரோஸ்பூர் எல்லையில் ஆயுதங்கள் பறிமுதல்

பஞ்சாப்பின் அமிர்தசரசில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Etv Bharatஇந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஆயுத கடத்தல் - புலனாய்வுத்துறை அதிகாரிகள் தகவல்

author img

By

Published : Dec 3, 2022, 10:52 AM IST

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன் பஞ்சாப் புலனாய்வுத்துறையினரால் கடத்தல் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் பெரோஸ்பூர் எல்லையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைக்கு அனுப்பப்பட்டதாக டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்த தகவல் உறுதிசெய்யப்பட்ட பின்னர் துணை காவல் ஆணையர் அமர்ஜித் சிங் பஜ்வாவின் மேற்பார்வையின் கீழ் ஒரு குழு பெரோஸ்பூருக்கு சென்றது. சந்தேகிக்கப்படும் இடங்களில் புலனாய்வுத்துறை குழு நடத்திய ஆய்வில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

டிஜிபி கவுரவ் யாதவ் ட்விட்டர்
டிஜிபி கவுரவ் யாதவ் ட்விட்டர்

இது குறித்து டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், ஆயுதங்கள் அடங்கிய பெட்டியில் 5 ஏகே 47 மற்றும் 5 பிஸ்டல்களை போலீசார் மீட்டனர். அதுமட்டுமின்றி ஏகே 47 ரக 5 துப்பாக்கிகள் மற்றும் 10 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன’ என கூறினார். மேலும் இந்த ஆயுதங்களுடன் 13 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

இதையும் படிங்க:ஆன்லைனில் இசையமைப்பாளராக பணியாற்றி வந்த வாலிபர் கொலை; 5 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.