ஒடிசா(புவனேஸ்வர்):பழம்பெரும் நடிகை ஜரனா தாஸ்(82) கட்டாக்கில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (டிச.1) இரவு காலமானார். இவர் அமடா படா, அபினேத்ரி, மலஜன்ஹா போன்ற கிளாசிக் படங்களில் மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
அவர் கட்டாக்கில் உள்ள அகில இந்திய வானொலியில் முக்கிய குழந்தை கலைஞராக பணியாற்றினார். இந்த பணியே பின்னாளில் சிறந்த நடிகையாக அமைந்ததற்கு அடித்தளமானது. குரு கேளுசரண் மகாபத்ரா விருது 2016 பெற்றார்.
அவர் கட்டாக் தூர்தர்ஷனில் உதவியாளராகவும் பணியாற்றினார். நிலைய இயக்குநர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். அவர் பிரபல ஒடியா அரசியல்வாதியான ஸ்ரீ ஹரே க்ருஷ்ண மஹ்தாப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரிஜினல் லேடி சூப்பர் ஸ்டார் சில்க் ஸ்மிதாவின் பிறந்த தினம்