இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் கொண்டு செல்ல நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், எவ்வித இடையூறுமின்றி ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்கள் இலக்கை அடைய, அவ்வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதை கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆக்சிஜன் ஏற்றி வரும் டேங்கர், ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வரும் வாகனங்களில் ட்ராக்கிங் டிவைஸ் (Vehicle Location Tracking) பொருத்துவது கட்டாயம். இந்த ஏற்பாடு வாகனங்களின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவல்: ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அலைமோதிய கூட்டம்-மருத்துவமனையின் நடவடிக்கைள் என்ன?