டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரில் பவுன்ஸ் செக் கொடுத்து ஏமாற்றிய பல்வந்த் சிங் என்பவருக்கு 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரக்பூரின் தேவிபுரா பகுதியில் வசித்துவரும் நிர்மலா என்பவரிடம் அவரது மூத்த சகோதரரான பல்வந்த் சிங் 2018ஆம் ஆண்டு தனது மகனின் திருமண செலவுக்காக ரூ.6 லட்சம் கடன் வாங்கினார்.
அதன்பின் பணத்தை திருப்பி கேட்டபோது, பல்வந்த் சிங் ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை நிர்மலாவிடம் கொடுத்தார். இந்த காசோலையை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி நிர்மலா அலகாபாத் வங்கிக் கிளையில் பணப்பரிமாற்றத்திற்கான எடுத்துச்சென்றார். இந்த காசோலை பவுன்ஸாகி விட்டதாக வங்கி அலுவலர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் மீண்டும் பல்வந்த் சிங்கிடம் வேறு காசோலையை நிர்மலா கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே காஷிபூர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று (டிசம்பர் 2) நடந்தது. அப்போது நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பல்வந்த் சிங் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. ஆகவே, ரூ.6 லட்சம் ரூபாயை 2 வாரங்களில் திருப்பி தரவேண்டும். அதோடு 4 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்த தொகையை கொடுக்க தவறினால் மேலும் 1 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை வழக்கில் வங்கதேச சகோதரர்கள் கைது