ETV Bharat / bharat

அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா பதில் - இந்தியாவுக்கு ஆதரவா? - வெள்ளை மாளிகை

அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அங்கீகரிப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

US
US
author img

By

Published : Apr 5, 2023, 10:12 AM IST

வாஷிங்டன் : அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அங்குள்ள 11 இடங்களுக்கு மறுபெயரிட்டு சீன வெளியிட்டு உள்ள ஒருதலைபட்சமான பிராந்திய உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

அருணாசல பிரதேசத்தை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா எல்லையில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோத குடியிருப்பு, தொலைத் தொடர்பு டவர்கள் அமைப்பது, பாலம் கட்டுமானம் உள்ளிட்ட அத்துமீறிய செயல்களில் சீனா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய பிரச்சினையாக அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு மறுபெயர் வைத்து சீனா கடந்த ஞாயிற்றுக்கிழமை வரைபடம் வெளியிட்டது. அந்த 11 இடங்களுக்கும் சீன, திபெத்திய, பின்யின் எழுத்துகளில் பெயர் சூட்டியும், சில பகுதிகளை தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்தது.

இந்த 11 இடங்களை உள்ளடக்கிய அருணாசல பிரதேசத்தின் பகுதிகளை தெற்கு திபத் என அறிவித்து சீனா வரைபடம் வெளியிட்டது. சீனாவின் மறுபெயர் பட்டியலில் ஐந்து மலைச் சிகரங்கள், தலா இரண்டு குடியிருப்புப் பகுதிகள், நிலப் பரப்பு மற்றும் இரண்டு ஆறுகள் இருந்தன. இதில் சீனா பெயரிட்ட ஒரு பகுதி அருனாசல பிரதேச தலைநகர் இடா நகர் அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனாவின் மறுபெயர் அறிவிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், "சீனா மறுபெயரிட்டு உள்ள அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் பெயரை மாற்றுவதன் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது" என்றார்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மறுபெயரிட்டு உள்ளதை இந்தியா முற்றிலும் நிராகரித்து உள்ளதாகவும், சீனாவின் பெயர் மாற்றம் அருணாசல பிரதேசத்தில் நிலவும் யதார்த்த சூழலை மாற்றாது என இந்தியா கூறி உள்ளதாக அவர் நினைவு கூர்ந்தார். இதுபோன்ற முயற்சிகளில் சீனா ஈடுபடுவது முதல் முறையல்ல என்று இதை அமெரிக்கா முற்றிலும் நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாக அவர் கூறினார்.

இது போன்ற அத்துமீறிய செயல்களில் சீனா ஈடுபடுவது புதிதல்ல. இதற்கு முன் இரு முறை இந்திய பகுதிகளுக்கு சீனா பெயரிட்டு சொந்தம் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு இதே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கும், 2021 ஆம் ஆண்டு 15 இடங்களுக்கும் சீனா பெயரிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : "சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கவில்லை" - முன்னாள் அதிபர் டிரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.