இறுதிகட்ட சோதனையை எட்டியது அர்ஜுன் மார்க் 1: விரைவில் ராணுவத்திற்கு கூடுதல் பலம்! - இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்
ஜெய்சல்மர்: ராணுவத்தின் அதிநவீன ஆயுதமான அர்ஜுன் மார்க் 1 ஆல்பா டேங்கி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் (Update version) இறுதிகட்ட சோதனையை எட்டியது.
ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதியில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் இந்திய ராணுவத்தின் மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஆயுதமான அர்ஜுன் மார்க் 1 ஆல்பா டேங்கியின் இறுதிகட்ட சோதனை நடைபெற்றது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 'இந்தியாவில் தயாரிப்பு' என்ற திட்டத்தின்கீழ் இந்த டேங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி வழிகாட்டும் ஏவுகணையுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த டேங்கி பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் இது இந்திய ராணுவத்திற்குக் கூடுதல் பலமாக இருக்கும் என்றும் விரைவில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெய்சல்மரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி இதில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.