இந்திய ரிசர்வ் வங்கி கரோனா பேரிடர் காலத்தில் நாட்டில் சிறு, குறு, நடுத்தர வணிகர்களை உருவாக்கிய முதல் 10 மாநிலங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளது உத்தரப் பிரதேச மாநிலம்.
ஆர்.பி.ஐ வெளியிட்ட பட்டியலின்படி, மத்தியப் பிரதேசம், குஜராத். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகியவை முதல் ஐந்து இடங்களையும், கர்நாடகா, ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, தெலங்கானா ஆகியவை அடுத்த ஐந்து இடங்களையும் பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேச அரசு நாடு முழுவதிலுமிருந்து சுமார் 40 லட்சம் புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற்றது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கடுமையான பணிகளையும் மேற்கொண்டது" என்று அம்மாநில அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும், அம்மாநில அரசாங்கம் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நிறுவனங்களுடந் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 11 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது எனத் தெரிவித்தார்.
புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சதி எனும் வளைதளத்தையும் உருவாக்கியுள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுடன் இணைந்து உலகளவிலான விற்பனைத் தளங்களை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக சிறு கிராமங்களும் தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறினார்.
இதையும் படிங்க: நாட்டில் வேலைக்கான போட்டி 30% உயர்வு: ஆய்வுத் தகவல்