உல்பா ஆயுத போராளியான ஜிபன் மோரான் (62) அமைதி வழிக்கு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1984ஆம் ஆண்டு உல்பா இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பர்மாவில் ஆயுத பயிற்சி பெற்றார்.
தனது வாழ்நாளில் பெருங்காலம் காடுகளில் மறைந்து இந்திய அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டுவந்த ஜிபோன், 37 ஆண்டு கால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தார்.
உல்பா அமைப்பிலிருந்து வெளியேறி மீதமுள்ள வாழ்க்கையை தனது குடும்பத்தினருடன் செலவிடவுள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடருக்கு முழு அரசு மரியாதை