நுஹ்: ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் பரபரப்பாக இயங்கி வரும் டெல்லி - மும்பை விரைவுச் சாலையில், கடந்த 22ஆம் தேதி பெட்ரோல் டேங்கர் லாரியும், ரோல்ஸ் ராய்ஸ் காரும் மோதிக் கொண்டது. மோதிய வேகத்தில், டேங்கர் லாரி தீப்பற்றியது. மோதிய காரிலும் தீ பரவியது. இந்த சம்பவத்தில், பெட்ரோல் டேங்கர் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்திலேயே, உடல் கருகி பலியாயினர்.
ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்த மூன்று பேர் படுகாயங்களுடன், சிகிச்சைக்காக, நுஹ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உம்ரி கிராமப்பகுதியில் அமைந்து உள்ள டெல்லி - மும்பை அதிவிரைவுச் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி விபத்தை ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆயில் டேங்கர் லாரி மோதிய வேகத்தில், தீப்பற்றியது. இந்த தீ, உடனடியாக காருக்கும் பரவியதாக கூறப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், டேங்கர் லாரியின் ஓட்டுநர் ராம்பிரீத் மற்றும் உதவியாளர் குல்தீப், சம்பவ இடத்திலேயே, உடல் கருகி பலியாயினர். ரோல்ஸ் ராய்ஸ் காரில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சொகுசு காரிலும் தீ பற்றியதால், அதில் இருந்த 3 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குபேர் குழும இயக்குநர் விகாஷ் மாலி, திவ்யா மற்றும் தஸ்பீர் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக, குருகிராம் பகுதியில் உள்ள மெதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல் டேங்கர் லாரி, தவறான திசையில் வந்ததாகவும், எதிரே வந்த சொகுசு கார் உடன் மோதுவதை தவிர்க்க, லாரியை டிரைவர் திருப்பிய போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து, கார் உடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள குபேர் குழும இயக்குநர் விகாஷ் மாலு, சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு, அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: B20 Summit India 2023 : B20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று சிறப்புரை!