ETV Bharat / bharat

பாஜகவினர் மீது அவதூறு வழக்குத்தொடர்ந்த கேசிஆர் மகள் கவிதா

author img

By

Published : Aug 24, 2022, 8:30 PM IST

டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதாக பாஜகவினர் மீது, தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

TRS MLC
TRS MLC

ஹைதராபாத்(தெலங்கானா): டெல்லியில் மதுபான உரிம ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்ட பாஜகவினர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இதனிடையே டெல்லி மதுபான உரிம ஊழல் விவகாரத்தில், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவின் மகளும், தெலங்கான சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா(44)-வுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதாக, டெல்லி பாஜக எம்.பி., பர்வேஸ் வர்மா மற்றும் முன்னாள் எம்எல்ஏ மஜும்தார் சிர்சா மீது கவிதா அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஹைதராபாத் சிவில் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது கண்ணியத்தையும், நற்பெயரையும் கெடுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்கள் என்றும், இவர்கள் இருவரும் தன்னிடம் மன்னிப்புக்கேட்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அவதூறு வழக்குத் தொடர கவிதா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ஆட்டோவில் ஏற முயன்றபோது மின்சாரம் தாக்கியதால் கீழே விழுந்த பள்ளி மாணவி... வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.