ETV Bharat / bharat

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு!

author img

By

Published : May 9, 2022, 1:06 PM IST

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திரிபுரா மாநில அரசு அறிவித்துள்ளது.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் தேயிலை உற்பத்தி தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. தேயிலைத் தோட்டத்தில் ஏராளாமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் நலனுக்காக அரசு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

திரிபுரா மாநில தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அம்மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு வங்கி கடன், பல்வேறு வகையில் நிதியுதவி வழங்கப்படும், இது அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் கூறுகையில், "தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும்" என்றார்.

மேலும் கூறுகையில், "மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தரமான வீடு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் கிராமப்புற மக்களுக்கு விரைவாக கிடைக்க இந்த அரசு பணி செய்து வருகிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டுவதற்கு கடந்த செப்டம்பரில் 1 லட்சத்து 59 ஆயிரம் வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகள் 55 சதவீதம் நிறைவடைந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஆந்திராவிலிருத்து 550 கி.மீ. தொலைவில் 'அசானி' புயல் மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.