கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சக்கரபரம்பு பகுதியில் உள்ள வாடகை அடுக்குமாடி குடியிருப்பில் இளம் திருநங்கை ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று திருநங்கையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் திருநங்கையின் உடலை உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் தற்கொலையில் உயிரிழந்தவர் 26 வயதான ஷெரீன் செலீன் மேத்தீவ் என்பது தெரியவந்தது. இவர் கொச்சி அருகில் உள்ள ஆழப்புலாவை சேர்ந்தவர் ஆவார்.
இந்த நிலையில் ஷெரீனுக்கு குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மனக் கசப்பு இருந்துள்ளது. இதையடுத்து அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர். முதலில் ஷெரீன் மரணத்தை மர்ம மரணமாகவே போலீசார் கருதினர். பின்னர் அவரின் உடற்கூராய்வு அறிக்கைகள் தற்கொலை உயிரிழப்பு என்பதை உறுதி செய்தன.
கடந்த ஆண்டு கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிரபல வானொலி தொகுப்பாளர் அனன்யா குமாரி அலெக்ஸ் என்பவர் தற்கொலையில் உயிரிழந்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காதலர் நாளில் திருமணம் செய்த திருநங்கை ஜோடி!