ETV Bharat / bharat

‘குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோர் எனக் குறிப்பிட வேண்டும்’ : நீதிமன்றத்தை நாடிய நாட்டின் முதல் திருநங்கை பெற்றோர்! - கோழிக்கோடு

நாட்டின் முதல் திருநங்கை பெற்றோரான சஹாத் மற்றும் ஜியா பவல் தங்கள் குழந்தைக்கான பிறப்பு சான்றிதழில் தாய், தந்தை என குறிப்பிடாமல் பெற்றோர் என பதிவு செய்து தரும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 22, 2023, 9:53 PM IST

கோழிக்கோடு: குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தாய், தந்தை என்பதை மாற்றி பெற்றோர் என திருத்தி வழங்க வேண்டும் என்று நாட்டின் முதல் திருநங்கை பெற்றோரான சஹாத் மற்றும் ஜியா பவல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என.நாகரேஷின், இதில் அரசின் நிலைபாட்டை கோரி வழக்கை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 1999ஆம் ஆண்டு கேரள பிறப்பு மற்றும் இறப்பு விதிகள் பிரிவு 12-ன்படி கோழிக்கோடு மாநகராட்சி, தந்தையின் பெயர் ஜியா பவல் (திருநங்கை) என்றும் தாயின் பெயர் சஹாத் (திருநம்பி) என்றும் குறிப்பிட்டு குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை வழங்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் சஹத்தை தாய் என குறிப்பிட்டு பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என கோழிக்கோடு மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் தாய் சஹத் ஒரு ஆணாக வாழ்வதால் தாய் என்று குறிப்பிட்டுத்தர முடியாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் காலத்தில் குழந்தை ஒரு ஆணால் பிறந்தது என்ற ஆதாரத்தை தவிர்க்க வேண்டும் என நினைத்த ஜியா பவல் மற்றும் சஹத் தம்பதி, பிறப்பு சான்றிதழில் தாய், தந்தை என குறிப்பிடாமல் பெற்றோர் என மட்டும் குறிப்பிட்டு தருமாறு கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மணிப்பூர் சம்பவம்: குற்றவாளியின் வீட்டிற்கு தீ வைப்பு - பிரதமர், முதலமைச்சர் உருவபொம்மை எரிப்பு!

அதில், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை மற்றும் தாயின் பெயரைப் பதிவு செய்வதால் குழந்தையின் பள்ளி சேர்க்கை, ஆதார் ஆவணம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படலாம் என மனுவில் கூறப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் உம்மலத்தூரை பூர்வீகமாகக் கொண்ட ஜஹாத் மற்றும் ஜியா பவல் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

தங்கள் வாழ்கை மற்ற திருநங்கை மற்றும் திருநம்பியர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்க வேண்டும் என நினைத்த அவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் ஹார்மோன் சிகிச்சைப் பெற்ற நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் பாலினம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளிப்படுத்தாத, இந்தியாவின் முதல் திருநங்கை தம்பதி தற்போது தங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் என பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதையும் படிங்க: Tomato Theft: "எங்க டார்கெட் தக்காளிதான்": 400 கிலோ தக்காளியோடு எஸ்கேப்பான திருடர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.