ETV Bharat / bharat

ஹெல்மெட் அணியாததை கண்டித்த போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய பெண்கள் - Delhi Traffic inspector attack by woman

டெல்லியில் ஹெல்மெட் அணியாததை கண்டித்த போக்குவரத்து ஆய்வாளரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

traffic-inspector-assaulted-over-issuing-challan-in-delh

author img

By

Published : Jun 9, 2022, 12:34 PM IST

டெல்லியின் சிஆர் பூங்கா சாலையில் நேற்று (ஜூன் 8) இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். அப்போது அவர்களை பணியிலிருந்து போக்குவரத்து ஆய்வாளர் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணியாததற்கும், மூன்று பேர் பயணம் செய்ததற்கும், அதோடு ஒன் வேயில் சென்றதற்கும் அபராத சலான் வழங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போன் செய்து மூன்று பேரை வரவழைத்து ஆர்வாளரை சரமாகிய தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி போலீசார் இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேரை கைது செய்தனர். இதனிடையே இரண்டு பெண்களில் ஒருவர் ஆய்வாளரே முதலில் தனது கன்னத்தில் அறைந்ததாகவும், அதனாலேயே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: பப்ஜி விளையாட்டால் விபரீதம்... தாயைச் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.