ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 24, 2021, 9:08 AM IST

1. ஜெர்மனி பிரதமருடன் நரேந்திர மோடி ஆலோசனை

ஆப்கன் நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

2. தொண்டர்கள் யாரும் என்னைச் சந்திக்க வேண்டாம் - விஜயகாந்த் அன்பு கட்டளை

தொண்டர்களே என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அன்பு கட்டளை இட்டுள்ளார்.

3. 'திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றிவையுங்கள் முதலமைச்சரே!'

சென்னை: குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு விண்ணப்பித்துள்ள தயாரிப்பாளர்களுக்கு மானியத் தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

4. தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகம் செய்த நிர்மலா சீதாராமன்

அரசு சொத்துகள் மூலம் நான்கு ஆண்டுகளில் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

5. கோடநாடு வழக்கு: விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி மனு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி சாட்சி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

6. HBD சாந்தனு - வாழ்த்து மழையில் நனையும் 'வேட்டிய மடிச்சுக்கட்டு' குட்டிப் பையன் சோனு!

பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

7. உத்தரகாண்டில் நிகழ்ந்த திடீர் நிலச்சரிவு - காணொலி

உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர்-சம்பவாத் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்வாலா அருகே மலை திடீரென விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நெடுஞ்சாலையில் கற்பாறைகள், மரங்கள், பெரிய அளவிலான குப்பைகளுடன் நிலம் சரிந்தது. நல்வாய்ப்பாக அந்த இடத்தைக் கடந்த அனைவரும் உயிர் தப்பினர்.

8. 'என்னங்க சார் உங்க சட்டம்' தலைப்பை மாற்றும் எண்ணமில்லை - படக்குழு திட்டவட்டம்

'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் தலைப்பை மாற்றும் எண்ணம் இல்லையென படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

9. 'தொடர்ந்து உழைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும்'

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்ற வேண்டும் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

10. சென்னையில் ஆக.26ஆம் தேதி மநீம ஆலோசனைக் கூட்டம்!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.