கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, டூல்கிட் தொடர்பான வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 22 வயதே ஆன சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பிணை கோரி அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது. குடியரசு தினத்திற்கு முன்பு, விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திஷா ரவி, நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோர் சூம் காலில் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கனடாவைச் சேர்ந்த புனீத் என்பவர்தான், நிகிதா ஜேக்கப், சாந்தனு, திஷா ரவி, போயட்டிக் ஜஸ்டீஸ் பவுண்டேஷன் என்ற காலிஸ்தான் அமைப்பு ஆகியோருக்கிடையேயான தொடர்பை ஏற்படுத்தியவர். அந்த சூம் கால் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றதாகவும் காவல்துறை கூறியுள்ளது.