ETV Bharat / bharat

தக்காளி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்... - மத்திய சுகாதாரத்துறை

தக்காளி காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tomato
Tomato
author img

By

Published : Aug 24, 2022, 2:13 PM IST

டெல்லி: இந்தியாவில் தக்காளி காய்ச்சல் முதன்முதலாக கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ஏற்பட்டது. நாட்டில் இதுவரை 82 குழந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தக்காளி காய்ச்சல் பரவி வருவதால், அதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் தக்காளி காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவியுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், இணை நோய்கள் கொண்ட பெரியவர்களுக்கும் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்ற வைரஸ் தொற்றுகளைப் போலவே, காய்ச்சல், சோர்வு, உடல்வலி, கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், தக்காளி காய்ச்சல், கரோனா, குரங்கம்மை, டெங்கு, சிக்கன்குனியாவிலிருந்து வேறுபட்டது.

இந்த தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. அதனால், மற்ற வைரஸ் காய்ச்சல்களைப் போலவே, தக்காளி காய்ச்சலையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை தொடுவது போன்ற நேரடித் தொடர்புகளை தவிர்க்க வேண்டும் - சரியான ஓய்வு எடுக்க வேண்டும் - நீர்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் - குழந்தைகள் கைக்குட்டைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் - முகம், மூக்கு, வாய் உள்ளிட்டவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும் - தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்... லான்செட் எச்சரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.