ETV Bharat / bharat

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி.. ஒடிசாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. - Udhayanidhi Stalin watch Hockey World Cup

ஒடிசாவில் நடந்துவரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை காண விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார்.

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை காண சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

author img

By

Published : Jan 20, 2023, 7:34 AM IST

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஜனவரி 13ஆம் தேதி ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்கின. ஜனவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 4 பிரிவுகளாக அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் உள்ளன. பி பிரிவில் பெல்ஜியம், ஜப்பான், கொரியா, ஜெர்மனி அணிகள் உள்ளன.

  • #HWC2023 போட்டிகளை காண, விளையாட்டுதுறை கட்டமைப்பை பார்வையிட ஒடிசா சென்றபோது முதலமைச்சர் @Naveen_Odisha அவர்களை இன்று சந்தித்து, விளையாட்டு சார்ந்த கனவு திட்டங்களை செயல்படுத்தும் அவருக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்தேன். முதலமைச்சர் @mkstalin அவர்கள் குறித்து நலம் விசாரித்தார். pic.twitter.com/vbMD7z1bo6

    — Udhay (@Udhaystalin) January 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல சி பிரிவில் நெதர்லாந்து, சிலி, மலேசியா, நியூசிலாந்து அணிகளும், டி பிரிவில் இந்தியா, வேல்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து அணிகளும் உள்ளன. ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளன.

இந்த போட்டிகளை காண முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் புவனேஷ்வருக்கு சென்றுவருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜனவரி 19) புவனேஷ்வர் சென்றார். அதோடு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து அன்பளிப்பை வழங்கினார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ஹாக்கி போட்டிகளை காண, விளையாட்டுதுறை கட்டமைப்பை பார்வையிட ஒடிசா சென்றபோது முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து, விளையாட்டு சார்ந்த கனவு திட்டங்களை செயல்படுத்தும் அவருக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்தேன்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து நலம் விசாரித்தார் எனப் பதிவிட்டுள்ளார். அதன்பின் அவர், இந்தியா Vs வேல்ஸ் ஹாக்கி போட்டியை நவீன் பட்நாயக் உடன் சேர்ந்து கண்டுகளித்தார். இந்த போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வென்றது.

இதையும் படிங்க: இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்.. அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.